ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், வி.டி.வி. கணேஷ், யோகி பாபு ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'சுமோ'. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை கவரும் படமாக காமெடி கதை களத்தில் உருவாகியுள்ளது.
கடந்த 2020ல் ரிலீஸ்க்கு தயாரான இந்த படம் சில பிரச்னைகளால் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கிடப்பில் கிடந்தது. இதற்கிடையில் இந்த படத்தை திரைக்கு கொண்டு வர ரிலீஸ் தேதி அறிவித்து தள்ளிபோனது.
இந்த நிலையில் இதன் ரிலீஸிற்கான பணிகள் சமீபத்தில் தொடங்கி உள்ளது. சுமோ படத்தை வருகின்ற அக்டோபர் மாதத்தில் திரைக்கு கொண்டு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த முறையாவது எந்த சிக்கலும் இன்றி படம் வெளியாக வேண்டும் என கருத்து பதிவிட்டுள்ளனர்.