புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
பரத் நடித்த 'பிப்ரவரி 14', சாந்தனு நடித்த 'ஆயிரம் விளக்கு ' படங்களை இயக்கிய எஸ்.பி.ஹோசிமின் இயக்கி உள்ள படம் 'சுமோ'. இந்த படத்தில் மிர்சி சிவா, பிரியா ஆனந்த், விடிவி.கணேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜப்பானை சேர்ந்த மல்யுத்த சேம்பியன் யோகினோரி தஸ்கிரோ நடித்துள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார், நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார்.
ஜப்பான் சுமோ ஒருவரை சென்னைக்கு அழைத்து வந்து சில வேலைகளை செய்ய மிர்சி சிவா டீம் முயற்சிக்கிறது. அதன் விளைவு என்ன என்பதுதான் படத்தின் கதை.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்த இந்த படம் சில காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. தற்போது வருகிற 25ம் தேதி வெளிவர இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.