Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னையும்... ‛கப்புள் பிரண்ட்லி' படமும் : இயக்குனர் அஷ்வின் பேட்டி

24 பிப், 2026 - 11:15 IST
எழுத்தின் அளவு:
Chennai-and...-the-film-Couple-Friendly-Director-Ashwin-interview
Advertisement

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‛கப்புள் பிரண்ட்லி'. இந்த படத்துக்கும், சென்னைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தெலுங்கு படமாக இருந்தாலும் படத்தின் கதை சென்னையில் நடக்கிறது. படத்தின் இயக்குனர் அஷ்வின் சந்திரசேகர் தமிழ் நாட்டுக்காரர். இயக்குனர் பாண்டிராஜ் உதவியாளர். இந்த பட விழாவில் பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸ் தனது சென்னை அனுபவங்களை பேசியது வைரலானது. தமிழிலும் இந்த படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இயக்குனர் அஷ்வினிடம் பேசினோம். அவர் கூறியது, ‛‛எனக்கு சொந்த ஊர் கோவை. அப்பா தூர்தர்ஷனில் பணியாற்றியதால் லக்னோவில் வளர்ந்தேன். மீண்டும் சென்னை வந்தபோது சினிமா மீது ஆர்வம் வந்தது. இயக்குனர் பாண்டிராஜிடம் பசங்க 2, இது நம்ம ஆளு, கதகளி ஆகிய படங்களில் பணியாற்றினேன். பின்னர் சினிமா பண்ண ஆசைப்பட்டு ஒரு குறும்படம் பண்ணினேன். அந்த படத்தை பார்த்த ஹீரோ சந்தோஷ் ஷோபன் இந்த பட வாய்ப்பு கொடுத்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் யு.வி.நிறுவனம் படத்தை தயாரித்தது.

தெலுங்கு படமாக இருந்தாலும் சென்னைதான் கதைகளம் என்பதில் உறுதியாக இருந்தேன். அதை படக்குழுவும் ஒப்புக்கொண்டது. சென்னையின் நெரிசல் மிகுந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். முதலில் ஹீரோ, ஹீரோயின் வைத்து ரிகர்சல் நடத்தி பக்காவாக படப்பிடிப்பு நடத்தினோம். புதுமுகங்கள் என்பதால் சில இடங்களில் குறும்படம், விளம்பர படம் என்று சொன்னோம். படம் பார்த்தவர்கள் சென்னை லொக்கேஷன் பற்றி குறிப்பிட்டு பேசினார்கள். அதற்கு ஒளிப்பதிவாளர் தினேசும் முக்கியமான காரணம். அவர் லப்பர் பந்து போன்ற படங்களில் பணியாற்றியவர். அதேபோல் என் குறும்படத்தில் பணியாற்றிய ஆதித்யா இசையமைப்பாளர். பெரிய கம்பெனி என்றாலும் என் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். பின்னனி இசை பாடல்கள் பாராட்டப்படுவது மகிழ்ச்சி.

தெலுங்கில் சென்னை உணர்வை அந்த தொடர்பை ஏற்றுக் கொண்டனர். பலருக்கு சென்னையுடன் படிப்பு சொந்தம் என நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அது படத்தை வெற்றி படமாக்கியது. சென்னை பற்றி இவ்வளவு நல்லபதிவை, இடங்களை தமிழ் படத்தில் கூட பாராட்டியது இல்லை என பலர் பாராட்டினார்கள். பிரபாஸ் சென்னை பாசத்தை பேசியது வைரலானது. படம் பார்த்து விட்டு என் குருநாதர் பாண்டிரஜும் பாராட்டினார்கள். அந்த ஹீரோயின் யார். பக்காவாக பொருந்தி இருக்கிறாரே என பலர் கேட்கிறார்கள். முதலில் 16 ஹீரோயினை தேடி இவரை கண்டுபிடித்தோம். மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர். ஹீரோ சந்தோஷ் தெலுங்கில் பிரபாஸ், திரிஷா நடித்து ஹிட்டான வர்சம் படத்தை இயக்கிய சோபனின் மகன் ஆவார்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'கங்குவா' சாதனையை முறியடிக்குமா 'கமல் ரஜினி ரீ யூனியன்' வீடியோ'கங்குவா' சாதனையை முறியடிக்குமா ... படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… படங்கள் இல்லை : சிங்கிள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap