கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
நடிகை அமலா பால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். தான் கர்ப்பமானதிலிருந்து தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி அதுகுறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கான பேஷன் ஷோ நடைபெற்றுள்ளது. கர்ப்பிணி பெண்களின் மகப்பேர் காலத்தை மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதில் 105 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை அமலாபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அவர், ரேம்ப் வாக் நடந்த வீடியோவை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடப்பட்டு அது வைரலாகி வருகிறது. அதோடு உலக அளவில் அதிகப்படியான கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்ட பேஷன் ஷோ என்ற அங்கீகாரத்தையும் இந்த நிகழ்ச்சி பெற்றுள்ளது.