பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு, தனது தந்தையின் பிறந்தாநாளான மே-31 அன்று வழக்கமாக தனது படங்கள் குறித்த அப்டேட்டுகளை, போஸ்டர், டீசர் போன்றவற்றை வெளியிடுவது வழக்கம். ஆனால் நேற்றைய தினம் அப்படி எந்த தகவலும் அவர் படம் குறித்து வெளியாகவில்லை. அதேசமயம் அவரது தந்தை கிருஷ்ணா, ஒரு பேட்டியில் மகேஷ்பாபு தனது கோரிக்கை ஒன்றை நிராகரித்தது குறித்து பகிர்ந்துகொண்ட புதிய தகவல் வெளியானது.
அதாவது கடந்த 70 வருடங்களுக்கு முன் என்.டி.ராமாராவ் மற்றும் ரங்காராவ் இருவரும் இணைந்து நடித்த பாதாள பைரவி என்கிற மாயாஜால படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்தப்படத்தை இந்தக்காலத்திற்கு ஏற்ற மாதிரி இந்தியில் ரீமேக் செய்து அதில் மகேஷ்பாபு நடிக்க வேண்டும் என அவரிடம் கூறினாராம் தந்தை கிருஷ்ணா.
ஆனால் மகேஷ்பாபுவோ தந்தையின் வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டாராம். ரொம்ப பழைய படம், இந்த காலத்தில் ரீமேக் செய்யும்போது, அதுவும் தனக்கு செட்டாகுமா என்கிற காரணத்தினால் அவர் மறுக்கவில்லை.. பொதுவாகவே ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்பதையும் தெலுங்கு தவிர மற்ற மொழிகளில் நடிப்பதில்லை என்பதையும் மகேஷ்பாபு கொள்கையாவே வைத்திருப்பதுதான், தனது தந்தையின் கோரிக்கையை நிராகரிக்க காரணமாம்.