10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் |

மலையாள ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு படத்திற்கு இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளது. இந்த நான்கு பாகங்களிலும் சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருந்தார். நான்கு பாகங்களுக்குமே கதாசிரியர் எஸ்.என்.சுவாமி கதை எழுத, இயக்குனர் கே.மது இந்த படங்களை இயக்கியிருந்தார். இந்தநிலையில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு இந்தப்படத்தின் ஐந்தாம் பாகம் துவங்குவதற்கான வேலைகள் வேகமெடுத்திருக்கின்றன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இந்தப்படத்தின் இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜேக்ஸ் பிஜாய், “மலையாள ரசிகர்களின் மனம் கவர்ந்த சிபிஐ படத்தின் 5ஆம் பாகத்திற்கு இசையமைப்பதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறன்” என கூறியுள்ளார்..
தமிழில் துருவங்கள் பதினாறு, மாபியா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜேக்ஸ் பிஜாய். கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும் படத்தில் இவரது இசையில் இடம்பெற்ற 'களக்காத்தா சந்தனமேரா' என்கிற பாடல் ரசிகர்களிடையே வெகு பிரபலமானது குறிப்பிடத்தக்கது.