நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
பிரபல தெலுங்கு நடிகரும், மகேஷ்பாபுவின் தந்தையுமான நடிகர் கிருஷ்ணாவுக்கு மே 31-ந்தேதியான இன்று பிறந்த நாள் ஆகும். அவரது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் மகேஷ்பாபு நடித்த படங்களின் போஸ்டர், டிரைலர்களை அவரது பட தயாரிப்பாளர்கள் வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அலை வீசிக்கொண்டி ருப்பதால் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று மகேஷ்பாபு படத்தின் பிரமோசன்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
மேலும், மகேஷ்பாபு தனது தந்தை கிருஷ்ணா நடித்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்னர் அவர் ஹீரோவான பிறகு அவரது தந்தையான நடிகர் கிரஷ்ணா, மகேஷ்பாபு நடித்த வம்சி, ராஜா குமருடு ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் இன்று தனது தந்தைக்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் மகேஷ்பாபு. அதில், பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா, நான் முன்னோக்கி செல்வதற்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பதற்கு நன்றி. உங்களுக்கு தெரிந்ததை விட நான் உங்களை அதிகமாக நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.