விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் | த மெட்ராஸ் மிஸ்டரி : அது சாந்தனு அல்ல, யோஹன் சாக்கோ | மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் சித்தார்த் | இளயராஜாவை பார்த்து வளர்ந்தவன் நான்: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் |
தற்போது சிரஞ்சீவியை வைத்து ஆச்சார்யா என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் கொரட்டால சிவா. இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்குகிறார் என்கிற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா கபூர் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் சோஷியல் மீடியாவில் கசிந்துள்ளது.
ஆனால் இந்த தகவல் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களை கவலையடைய செய்திருக்கிறது. காரணம் பிரபாஸுடன் சாஹோ படத்தில் இணைந்து நடித்த ஷரத்தா கபூர் பற்றி அப்போது பெரிய பில்டப் கொடுக்கப்பட்டது.. ஆனால் படமும் சரியாக போகவில்லை. ஷ்ரத்தா கபூரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அந்த தோல்வி சென்டிமென்ட் ஜூனியர் என்.டி.ஆரின் படத்தையும் பாதித்துவிட கூட என்கிற விதமாக சோஷியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள்.