நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
மலையாள திரையுலகில் பிரபல கதாசிரியராக மற்றும் இயக்குனராக வலம் வந்த டென்னிஸ் ஜோசப், கொரோனா தோற்று காரணமாக நேற்று மரணமடைந்தார். 90களில் மோகன்லால், மம்முட்டியின் பல ஹிட் படங்களில் இவரது பங்களிப்பு இருந்து வந்தது. காலப்போக்கில் இவரது பட எண்ணிக்கைகள் குறைந்தாலும் தற்போதைய தலைமுறை இயக்குனர்களுடனும் பணியாற்றி வந்தார் டென்னிஸ் ஜோசப்.
அந்தவகையில் ஒரு அதார் லவ் படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட இயக்குனர் ஓமர் லுலு அடுத்தததாக இயக்கவுள்ள 'பவர்ஸ்டார் என்கிற படத்திற்கு டென்னிஸ் ஜோசப் தான் கதை எழுதி வந்தார். வில்லன் நடிகர் பாபு ஆண்டனி கதையின் நாயகனாக நடிக்கவுள்ள இந்தப்படத்தின் கதையை கிட்டத்தட்ட எழுதி முடித்துவிட்ட நிலையில் தான் அவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
ஓமர் லுலு இதுபற்றி கூறும்போது, “அவ்வளவு பெரிய கதாசிரியருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். அவர் மறைந்துவிட்டதால் இந்தப்படம் நிற்காது. இயக்குனர் உன்னிகிருஷ்ணனும், கதாசிரியர் உதயகிருஷ்ணாவும் இந்தப்படத்தின் கதைக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கும் படப்பிடிப்பை துவங்குவதற்கும் உதவுவதாக கூறியுள்ளனர். அந்தவிதமாக இந்தப்படத்தை எடுத்தே தீருவேன்” என கூறியுள்ளார்.