'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாளத்தில் குறூப், சல்யூட், தமிழில் ஹே சினாமிகா என, மூன்று படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்ட துல்கர் சல்மான் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க துவங்கி விட்டார். மகாநடி படத்தை தொடர்ந்து தெலுங்கில் துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது படம் இது. தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
இந்தப்படத்தில் லெப்டினென்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார்.. அதனாலேயே காஷ்மீரில் இதன் படப்பிடிப்பை நடத்துகிறார்கள்.. அதுமட்டுமல, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராகும் இந்த படம், 1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகவுள்ளது.