கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி | மூன்று முடிச்சு சீரியலில் என்ட்ரி தரும் மிதுன் | மறுபிறவி தந்த கிருஷ்ணதாசி - நளினி பேட்டி | பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா | பொங்கல் போட்டியில் முந்தும் 'மத கஜ ராஜா' | ஒரே நாளில் வசூல் அப்டேட்டை நிறுத்திய 'கேம் சேஞ்ஜர்' | நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் 'வாடிவாசல்' |
கன்னட சினிமாவில் வளர்ந்து வந்த இளம் நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத். கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா, சம்யுத்தா படங்களை அவரே தயாரித்து நடித்தார். ஜீரோ பிரசன்ட் காதல் என்ற படத்தை தயாரித்து நடித்து வந்தார். இந்த படத்தை வருகிற ஜூன் 22ந் தேதி தனது பிறந்த நாளில் வெளியிட திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில் மஞ்சுநாத்துக்கு கடந்த வாரம் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. அற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உடல்நிலை மோசமடைய ஐசியூவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அவருக்கு ஏற்கெனவே சிறுநீரக தொற்று பிரச்சினை இருந்ததும், அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. 35 வயதான மஞ்சுநாத்தின் மரணம் கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.