
கொரோனா தாக்குதல்: ஆச்சார்யா படப்பிடிப்பு நிறுத்தம்
இந்த நிலையில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை ராம் சரணும், அவரது மனைவி உபாஷனாவும் கவனித்து வருகின்றனர். இதனால் பவன் கல்யாண், கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு தான் ராம் சரண் மீண்டும் நடிக்க வருவார் என்று தெரிகிறது.
ஆச்சார்யாவில் வில்லனாக நடிக்கும் சோனு சூட்டிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா அதிகரித்து வருவதால் ஆச்சார்யா படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இந்த ஆண்டு மே மாதம் வெளிவருவதாக இருந்த இந்தப் படம், நவம்பர், அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!