சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு அடார் லவ் படத்தில் நடித்து, தனது வித்தியாசமான புருவ சிமிட்டல்கள் மூலமாக மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். தற்போது தெலுங்கில் இஷ்க் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பிரியா வாரியர். இந்தப்படத்தில் தேஜா சஜ்ஜா என்பவர் கதாநாயகனாக நடிக்க, எஸ்.எஸ்.ராஜூ என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படம் வரும் ஏப்-23ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை மலைபோல நம்பியுள்ள பிரியா வாரியர், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு பக்காவாக ஒத்துழைப்பு கொடுத்து கலந்துகொண்டு வருகிறார். ஆனால் ஏற்கனவே இதே தேதியில் ரிலீசாக இருந்த விராட பர்வம், தலைவி, எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்கள், கொரோனா இரண்டாவது அலை, லாக் டவுன், தியேட்டர் காட்சிகள் குறைப்பு என பல்வேறு காரணங்களால் ரிலீஸாவதில் இருந்து பின்வாங்கி விட்டன.
ஆனாலும் இஷ்க் பட நிறுவனத்திடம் இருந்து அப்படி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகததால், இந்த வாரம் தென்னிந்திய அளவில் இந்த ஒரு படம் மட்டும் தான் வெளியாகும் என தெரிகிறது. மூன்று தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்தப்படத்தை தயாரித்திருந்தாலும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தான் இந்தப்படத்தை வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..