நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது. 100க்கும் அதிகமான நாடுகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்து,ஆயிரம் கோடி வசூலை ஈட்ட வேண்டும் என்பது படக்குழுவின் திட்டமாக இருக்கிறது. ஆனால், படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது படக்குழுவையும், ரஜினி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம், ஏ சான்றிதழ் என்றால் 18 வயதுக்கு குறைவானவர்கள் படம் பார்க்க முடியாது. தியேட்டர் வாசலில் திருப்பி அனுப்பி விடுவார்கள்.
ரஜினி படத்தை குழந்தைகளுடன், குடும்பமாக விசில் அடித்து ரசித்து பார்ப்பது பல ஆண்டுகால வழக்கம். ஏ சான்றிதழ் என்பதால் குழந்தைகளுடன் பார்க்க முடியாத நிலை. இது படத்தின் வசூலை பாதிக்குமா என்ற பயம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. குடும்பத்துடன் பார்த்தால்தான் ஒரு படம் ஹிட்டாகும், படத்தில் வன்முறை அதிகமா? ஏன் இப்படி என்று கேள்விகள் எழுந்துள்ளது.
பொதுவாக சென்சார்போர்டு ஏ சான்றிதழ் கொடுக்கிறோம் என சொன்னால் சில சீன்களை வெட்டி, சர்ச்சை டயலாக்குகளை நீக்க யு.ஏ சான்றிதழ் பெற முயற்சிப்பார்கள். ஆனால், லோகேஷ்கனகராஜ் அதை ஏன் செய்யவி்ல்லை. ஏ சான்றிதழுக்கு ஏன் ஓகே சொன்னார். ஒருவேளை ரீ சென்சார் அல்லது மேல்முறையீடு செய்வார்களா என்று பலருக்கு சந்தேகம்.
தவிர, படத்தின் நீளம் 2 மணி 48 மணி நேரம் என்பது கொஞ்சம் அதிகம்தான். இதெல்லாம் படத்துக்கு பிளஸா? மைனசா? லோகேசின் முந்தைய படமான லியோ வெற்றி படமாக அமையவில்லை. இப்போது கூலியிலும் இப்படி நடக்கிறதே? படத்தில் வன்முறை, போதை மருந்து, கடத்தல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக இருக்குமோ? கூலி எப்படி இருக்குமோ என இந்த சான்றிதழால் ரஜினி ரசிகர்களுக்கும் பயம் ஏற்பட்டுள்ளது.