விஜய்காந்த் ஆரோக்கியமாக இருக்கிறார் : பிரேமலதா | சசிகுமார் - சரத்குமாரின் 'நா நா' டிச., 15ல் ரிலீஸ் | அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன் | 'அனிமல்' முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு | விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'சலார்' டிரைலர் | மீனவர் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் | காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன் | ‛மெட்டி ஒலி' தனத்தை ஞாபகம் இருக்கா? | சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் பட நடிகர் |
சாய்பல்லவி நடிப்பில் தெலுங்கில் லவ் ஸ்டோரி மற்றும் விராட பர்வம் என இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதில் லவ் ஸ்டோரி படம் வரும் ஏப்-16ஆம் தேதி ரிலீசாகிறது. நாகசைதன்யா, சாய்பல்லவி இணைந்து நடித்துள்ள இந்தப்படத்தை, சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.. தற்போது இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர் நாகசைதன்யாவும், சாய்பல்லவியும்.
புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக நடிகர் ராணா, சின்னத்திரையில் நடத்தி வரும் யாரி நம்பர் 1 நிகழ்ச்சியில் நாகசைதன்யா சாய் பல்லவியுடன் இயக்குனர் சேகர் கம்முலாவும் கலந்துகொண்டார். ஏற்கனவே ராணாவுடன் விராட பர்வம் படத்தில் சாய்பல்லவி இணைந்து நடித்துள்ளதால், அவரிடம் கலகலப்பான கேள்விகளை கேட்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தினாராம் ராணா. இவர்கள் இணைந்து நடித்துள்ள விராட பர்வம் படம் வரும் ஏப்-30ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.