பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் |
பிரபல மலையாள நாவலாசிரியர் சி.வி.பாலகிருஷ்ணன் எழுதிய காமமோகிதம் என்கிற நாவலை படமாக்க மறைந்த இயக்குனர் பரதன் உள்ளிட்டட சில இயக்குனர்கள் முயற்சி எடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் எல்லோருமே இந்த நாவலில் இடம்பெறும் ஜஜாலி மற்றும் சாகர தத்தன் என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் மம்முட்டி, மோகன்லாலை மட்டுமே கற்பனை செய்து வைத்திருந்தனர்.
அதேசமயம் கே.ஜி .ஜார்ஜ் என்பவர் மம்முட்டி, மோகன்லால் இருவரையும் வைத்து இதை ஆரம்பிக்கும் பணிகளில் இறங்கினார்.. ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. மறைந்த இயக்குனர் பத்ரன், இந்த இரண்டு கேரக்டர்களிலும் மோகன்லாலை நடிக்க வைத்து இந்தப்படத்தை உருவாக்க ஒரு முயற்சி எடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனாலும் இந்த முயற்சிகள் எதுவும் முன்னோக்கி நகரவில்லை. இந்தநிலையில் மம்முட்டியும் இதன் நாவலாசிரியர் சி.வி.பாலகிருஷ்ணனும் இணைந்த புகைப்படம் ஒன்று டிவிட்டரில் வெளியாகி, இந்தப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தப்படம் தற்போது மம்முட்டியின் கைகளுக்கு மாறியுள்ளது உறுதியாகியுள்ளது.