'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

சி.எச்.நாராயண மூர்த்தி இயக்கத்தில், 1967ல் வெளியான 'பக்த பிரகலாதா' படத்தை நம்மில் பலரும் பார்த்து இருப்போம். தமிழ், தெலுங்கில் வெளியான அந்த படத்தில் ரங்காராவ், அஞ்சலிதேவி நடித்து இருந்தவர், சிறுவன் பிரகலாதானாக நடிகை ரோஜா ரமணி நடித்தார். அந்த படத்தின் பாடல்களும், சீன்களும் இன்றும் பிரபலம். அதற்குபின் நரசிம்மர் குறித்து தமிழில் அதிக படங்கள் வந்தது இல்லை. இப்போது 'மஹாவதார் நரசிம்மா' என்ற பக்தி படம் வருகிறது. கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்க, க்ளீம் புரடக்சன்ஸ் “மஹாவதார் நரசிம்மா”வை தயாரித்துள்ளளது.
படம் குறித்து தயாரிப்பாளர் ஷில்பா தவான் கூறுகையில் '' 5 ஆண்டுகளின் இடைவிடாத உழைப்புக்குப் பிறகு, ஸ்ரீ நரசிம்மர் மற்றும் ஸ்ரீ வராஹரின் காவியக் கதையை, உலகிற்கு வெளிப்படுத்த நாங்கள் இறுதியாகத் தயாராகிவிட்டோம்! ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு இதயத்துடிப்பும் இந்த தெய்வீகக் கதையை உயிர்ப்பித்துள்ளன'' என்கிறார்.
இயக்குநர் அஷ்வின் குமார் கூறுகையில் ''இந்த அனிமேஷன் திரைப்படத்தின் டிரைலரை அவரது அருள் நிறைந்த இந்திரேஷ்ஜி மகாராஜ் புனித பூமியான பிருந்தாவனத்தில் வெளியிட்டார்'' என்றார். இந்த படம் தவிர்த்து, விஷ்ணுவின் பத்து தெய்வீக அவதாரங்களை இந்த படக்குழு அடுத்தடுத்து படமாக்கி வெளியிட உள்ளது. முதற்கட்டமாக 3டி.,யில், ஐந்து இந்திய மொழிகளில், வரும் ஜூலை 25ல் 'மஹாவதார் நரசிம்மா' ரிலீஸ் ஆகிறது.




