நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

'குபேரா' படத்திற்குப் பிறகு தனுஷ் நடிக்க உள்ள தமிழ்ப் படமாக 'அமரன்' இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது படம் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான திரைக்கதை வேலைகள் இன்னும் முடியாத காரணத்தால் 'போர் தொழில்' இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அவரது 54வது படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜூலை 10) பூஜையுடன் ஆரம்பமாகி உள்ளது.
இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க, மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

இப்படத்திற்குப் பிறகு தான் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள படம் ஆரம்பமாகும் என்கிறார்கள். தனுஷின் அடுத்த வெளியீடாக 'இட்லி கடை' படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. அவர் நடித்துள்ள ஹிந்திப் படமான 'தேரே இஷ்க் மெயின்' நவம்பர் 28ம் தேதி வெளியாகிறது.
கடந்த மாதம் வெளியான 'குபேரா' படம் தமிழில் தோல்வியடைந்தது. தெலுங்கில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால், தனுஷ் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் மட்டுமே நடிப்பார் எனத் தெரிகிறது.