விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
ஆர்யா நடித்த ராஜா ராணி விஜய் நடித்த தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியவர் அட்லி. அடுத்தபடியாகவும் விஜய்யை வைத்து தான் படம் இயக்கப்போவதாகவும் அதற்கான கதையை ரெடி பண்ணி வருவதாகவும் கூறி வந்தார் அட்லி.
தொடர்ந்து அட்லியின் இயக்கத்தில் நடிக்க விரும்பாத விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தை அடுத்து வெற்றிமாறன் அல்லது சதுரங்கவேட்டை வினோத் இயக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்யின் இந்த முடிவினைத் தொடர்ந்து இதுவரை விஜய் எப்படியும் கால்சீட் தருவார் என்று நம்பிக்கொண்டிருந்த அட்லி இப்போது தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார். அல்லு அர்ஜூனை வைத்து தமிழ், தெலுங்கில் அடுத்த படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும், அல்லு அர்ஜூன் நடிக்கப்போகும் இந்த கதையை விஜய்க்காக அட்லி ரெடி பண்ணியது என்று கூறப்படுகிறது.