அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

அருவி, வாழ் படங்களை இயக்கிய அருண் பிரபு தற்போது இயக்கி உள்ள படம் சக்தித் திருமகன். விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பாக மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். திரிப்தி நாயகியாக நடித்துள்ளார்.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் விஜய் ஆண்டனி பேசியதாவது: தமிழ் சினிமாவில் டாப் 5 படங்களில் அருவி ஒரு படம். அதேப்போல் இந்திய அளவில் டாப் 5 இயக்குனர்களில் அருண் பிரபு ஒருவர். சர்வதேச அளவில் படம் எடுக்கக் கூடிய வல்லமை அவருக்கு இருக்கிறது. எப்போது அருண் வந்தாலும் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் அவருக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். அவருக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு தயாராக இருக்கிறேன். அருண் பிரபு அடுத்து இயக்கும் படம், பெரிய படமாக தான் இருக்க வேண்டும்.
நான் சில காலமாக இசையமைப்பதில் கவனம் செலுத்தவில்லை. சக்தித் திருமகன் படத்தின் வெளியீட்டிற்கு பின்பு மீண்டும் இசையில் கவனம் செலுத்தவுள்ளேன் . அருண் பிரபு எப்போதுமே கதாநாயகியை தேர்வு செய்வதில் தனித்தன்மையாக இருப்பார். அவர் படங்களில் இருக்கும் நாயகிகள் பக்கத்து வீட்டு பெண்கள் போல தான் இருப்பார்கள். அதுபோலத்தான் இந்த படத்திற்கும் யாரை தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் திரிப்தியை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவரும் மிகவும் நன்றாக இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்'' என்றார்.