அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
கடந்த ஒரு மாதமாக 'ஜிமிக்கி கம்மல்' பாடல் பாடல் செம வைரலாகி சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ள விஷயம் தெரிந்ததுதான்.. மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றாலும், இதில் புதிய இளம் நடிகர்கள் பங்குபெற்று ஆடிப்பாடினார்களே தவிர, மோகன்லால் இந்தப்பாடலில் இடம்பெறவில்லை. சொல்லப்போனால் இந்தப்பாடலின் முடிவில் தான் படத்தில் மோகன்லாலின் என்ட்ரியே ஆரம்பமாகும்.
இந்தப்பாடல் மிகப்பெரிய அளவு ஹிட்டாகியுள்ளதால், படத்தின் இயக்குனர் லால் ஜோஸுக்கும் மோகன்லாலுக்கும் இந்தப்பாடலை கொண்டாடவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.. அதை உடனே செயலாக்கியும் விட்டனர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் இப்போது சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்து பரபரப்பாக்கியுள்ளது.
அந்த வீடியோவில் இந்தப்பாடலில் இடம்பெற்று நடித்த நடிகர்களான அருண் குரியனும் சரத்குமாரும், இந்தப்பாடலின் வெற்றிக்கு தாங்கள் தான் சொந்தம் என சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அப்போது அவர்களிடம் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாட வரும்படி அழைப்பு வருகிறது. ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில் இருந்தால் தான் ஆட வருவோம் என அடம்பிடித்து, பின் ஆட வருகிறார்கள்.
அப்படி நிறைய பெண்களுடன் இணைந்து அவர்கள் ஆடிக்கொண்டிருக்கும்போது அந்த அரங்கத்தில் திடீரென சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கிறார் மோகன்லால். அனைவரும் ஷாக்காகி நிற்க, அவர்களை உற்சாகப்படுத்திய மோகன்லால், ஜிமிக்கி கம்மல் பாட்டிற்கு தானும் சேர்ந்து அவர்களுடன் சூப்பராக டான்ஸ் ஆடுகிறார். மோகன்லாலின் நடனத்துடன் சேர்த்து பார்க்கும்போது இந்தப்பாடல் இன்னும் மெருகேறியுள்ளதாகவே தெரிகிறது.