மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
மோகன்லால் நடிப்பில் கடந்த 1989ம் வருடம் மலையாளத்தில் வெளியான படம் கிரீடம். இயக்குனர் சிபி மலையில் இயக்கியிருந்த இந்த படத்திற்கு பிரபல இயக்குனர் லோகிததாஸ் கதை எழுதி இருந்தார். இந்தப் படத்திற்கு கிரீடம் என டைட்டில் வந்ததே ஒரு சுவாரசியமான விஷயம். அதாவது அதற்கு முன்னதாக அப்போது கதாசிரியராக இருந்த லோகிததாஸ் மம்முட்டியிடம் ஒரு கதை சொல்லி, அந்த கதை மம்முட்டிக்கும் பிடித்து விட்டது. அப்போது அதற்கு டைட்டிலாக கிரீடம் என வைத்தால் நன்றாக இருக்கும் என கூறினார் லோகிததாஸ். ஆனால் கிரீடம் என வைத்தால் கொஞ்சம் கம்பீரமாக இருக்கிறது. இந்த கதைக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்காது அதனால் கிரீடம் வேண்டாம் வேறு டைட்டில் பார்க்கலாம் என்று சொன்னாராம் மம்முட்டி. அதைத்தொடர்ந்து அந்தப் படத்திற்கு முக்தி என்று டைட்டில் வைக்கப்பட்டது.
அதன் பிறகு மோகன்லாலுக்காக ஒரு கதையை தயார் செய்து அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் கிருஷ்ணகுமாரிடம் சொன்னபோது அந்த கதை அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டது. அப்போது பேச்சுவாக்கில் இப்படி மம்முட்டி படத்திற்கு கிரீடம் என டைட்டில் சொன்னேன், அதை அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என கூறி உள்ளார் லோகிததாஸ். கிரீடம் நல்ல டைட்டில் தானே, பேசாமல் நம்ம படத்திற்கே அதை வைத்து விடலாம் என்று தயாரிப்பாளர் கிருஷ்ணகுமார் கூறியுள்ளார்.
அப்படித்தான் மோகன்லால் படத்திற்கு அந்த கதைக்கே சம்பந்தம் இல்லாவிட்டாலும் கூட கிரீடம் என டைட்டில் வைக்கப்பட்டது. ஆனால் அந்த படம் வெளியாகி மோகன்லாலின் நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்ததுடன் அந்த வருடத்திற்கான தேசிய விருது பட்டியலில் சிறப்பு பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது அவருக்கு கிடைத்தது. அந்த வகையில் மோகன்லாலின் திரையுலக பயணத்தில் இந்தப்படம் நிஜமாகவே அவருக்கு கிரீடம் சூட்டி விட்டது என்றே சொல்லலாம். இந்த தகவலை சமீபத்தில் கிரீடம் படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணகுமார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.