ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 21வது சர்வதேச திரைப்பட விழா, நேற்று இரவு கோலாகலமாக துவங்கியது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, நடிகர் சோ ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தியாவில், மாநில அரசு நடத்தும் ஒரே சர்வதேச திரைப்பட விழா, திருவனந்தபுரத்தில் ஆண்டு தோறும் நடக்கிறது. இதில், உலக அளவில் விருதுகள் பெற்ற பல திரைப்படங்கள் திரையிடப்படும். கோவாவிற்கு அடுத்து, திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்வர். இந்த ஆண்டிற்கான விழா நேற்று கேரள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. முதல்வர் பினராயி விஜயன் பாரம்பரிய விளக்கை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
இந்தி நடிகர் அமோல் பலேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செக் குடியரசின் திரைப்பட இயக்குனர் ஜெர்ரி மன்சிலுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சசி தரூர் எம்.பி., அமைச்சர்கள் தாமஸ் ஐசக், ஏ.கே.பாலன், இயக்குனர் அடூர் கோபால கிருஷ்ணன், நடிகை ஷீலா, நடிகர் மது கலந்து கொண்டனர்.
டிச., 16 வரை 62 நாடுகளை சேர்ந்த, 184 திரைப்படங்கள் 14 இடங்களில் 490 காட்சிகளாக திரையிடப்படுகிறது. வெளிநாடுகளை சேர்ந்த திரை உலக பிரபலங்கள் நடுவர்களாக இருந்து, விருதுக்கான படங்களை தேர்வு செய்வர். சிறந்த படத்திற்கு தங்க காகம் விருது வழங்கப்படும்.இது பிளாஸ்டிக் இல்லா திரைப்பட விழா என அறிவிக்கப்பட்டது. முற்றிலும் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்கள் பயன்படுத்தாமல் அனைத்து நிகழ்ச்சிகளையும், கேரள அரசு நடத்தவுள்ளது.