பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இந்தமுறை கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டும்போலத்தான் தெரிகிறது. ஆரம்பத்தில் முதல் ஆளாக துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக அறிவிக்கப்பட்டது.. இந்தப்படத்தை இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஹனீப் அதேனி என்கிற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள 'தி கிரேட் பாதர்' கிறிஸ்துமஸ் ரிலீஸாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ஜன-27க்கு பின் வாங்கியது... அதேபோல திலீப்பின் 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்' படமும் போட்டியில் இருந்து விலகிக்கொண்டது.
அதேசமயம் 'வெள்ளிமூங்கா' ஹிட் பட இயக்குனரான ஜிபு ஜேக்கப் டைரக்சனில் உருவாகி இருக்கும் மோகன்லாலின் 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படமும் பிருத்விராஜின் ஹாரர் த்ரில்லரான 'எஸ்ரா' படமும் இணைந்து மும்முனை போட்டி என்கிற சூழலை உருவாகின. இப்போது லேட்டஸ்ட்டாக சித்திக் டைரக்சனில் ஜெயசூர்யா நடித்துள்ள 'பக்ரி' படமும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. ஆக கிறிஸ்துமஸ் பண்டிகையில் நான்கு முனைப்போட்டி என்பது இப்போதே உறுதியாகியுள்ளது.