ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
நீண்ட நாட்களுக்கு முன்பே பேச்சுவார்த்தை அளவில் இருந்த விஷயத்திற்கு உயிர்கொடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்கள் மெகாஸ்டார் மம்முட்டியும் இயக்குனர் ஜானி ஆண்டனியும்... ஜானி ஆண்டனி மம்முட்டிக்கு ரொம்பவே ஸ்பெஷலானவர்.. மம்முட்டியை வைத்து இவர் இயக்கிய 'துருப்பு குலான்' மம்முட்டிக்கு ரொம்ப பிடித்த படங்களில் ஒன்று.. அடுத்ததாக 'இ பட்டணத்தில் பூதம்' மற்றும் 'தபபன்னா' என வரிசையாக மமுட்டியை வைத்து படங்களை இயக்கினார். இப்போது மம்முட்டியை வைத்து நான்காவது முறையாகவும் அவர் நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளை ஆரம்பித்துள்ளார். படத்தின் பெயர் 'தோப்பில் ஜோப்பன்'.
இந்தப்படத்தில் மம்முட்டி கபடி வீரராக நடிக்கிறார். அதுமட்டுமல்ல, தோப்புரம்குடி கபடி குழு' என்கிற பெயரில் கபடி குழு ஒன்றையும் நடத்தி வரும் கேரக்டராம். இந்தப்படத்தின் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் மீண்டும் அச்சாயன் கேரக்டரில் மம்முட்டி நடிப்பதுதான். அச்சாயன் என்றால் கேரள கிறித்துவர் என்று அர்த்தம். கோட்டயம் குஞ்சச்சன், ஒரு மறவத்தூர் கனவு, நஸ்ராணி, 'பிரைஸ் தி லார்ட்' ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இப்படி கிறித்துவ கேரக்டர்களில் அதுவும் முரட்டுத்தனமான அச்சாயனாக நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவைதான். இதன் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் துவங்க திட்டமிட்டுள்ளார்கள். படத்தில் கதாநாயகிகளாக ஆண்ட்ரியா அல்லது தீப்தி சதி இருவரில் யாராவது ஒருவர் நடிக்கலாம் என தெரிகிறது.