இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
90களின் மத்தியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி திரையுலகில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தியவர் நடிகை சிம்ரன். அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவர், தற்போது மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸை துவங்கியுள்ளார். அந்த வகையில் அவர் சமீபத்தில் எடுத்த மூன்று படங்களும் வெற்றியை பெற்றதுடன் சிம்ரனின் நடிப்புக்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. குறிப்பாக டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் சிம்ரனுக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்து விட்டது.
இந்த நிலையில் சிம்ரன் தனது திரை பயணம் ஆரம்பித்தது குறித்து கூறும்போது, “தமிழில் நான் படங்களில் அறிமுகமாவதற்கு முன்பாக மலையாளத்தில் தான் அறிமுகமானேன். மம்முட்டியுடன் இந்திர பிரஸ்தம் என்கிற படத்தில் நடித்தேன். மலையாளத்தில் நான் நடித்த ஒரே படமும் அதுதான். இங்கே தமிழில் டெல்லி தர்பார் என்கிற பெயரில் வெளியானது. இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் அவருடன் நடித்தது மறக்க முடியாதது. சமீபத்தில் கூட அவருடைய பஷுக்கா திரைப்படம் பார்த்தேன். இன்று வரை அவர் மாறவே இல்லை. என்னுடைய தம்பி சுமித்தும் இந்த படத்தில் நடித்திருந்தார். மம்முட்டியை பொறுத்தவரை அவர் ஒரு ஐகானிக் நடிகர். ரஜினி சாரை போல அவரும் எங்களைப் போன்ற மற்ற மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறார்” என்று தனது வியப்பை வெளிப்படுத்தி உள்ளார்.