சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகர் மம்முட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொச்சி பனம்பள்ளி நகரில் உள்ள தான் முன்பு வசித்து வந்த வீட்டை கெஸ்ட் ஹவுஸ் ஆக மாற்றி வெளியூர்களில் இருந்து கேரளா வரும் சுற்றுலா பயணிகளுக்கு தினசரி அடிப்படையில் வாடகைக்கு விட்டு வருகிறார். மம்முட்டி வீட்டில் சென்று தங்குகிறோம் என்கிற ஆர்வத்திலேயே தினசரி பலரும் கொச்சியில் உள்ள மம்முட்டி வீட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மோகன்லாலும் தன்னுடைய கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை சுற்றுலா பயணிகளுக்காக தற்போது தினசரி வாடகைக்கு விட துவங்கியுள்ளார். ஆனால் கேரளாவில் அல்ல. ஊட்டியில் இருக்கும் அவரது கெஸ்ட் ஹவுஸை தான். இதற்கு தினசரி 37 ஆயிரம் ரூபாய் வாடகையாக வசூலிக்கப்படுகிறது.
இதில் மூன்று தங்கும் அறைகள் உட்பட அனைத்து விதமான வசதிகளும் இருக்கின்றன. ஒரு ஓவிய கேலரி விளையாட்டு ஒன்றும் அங்கே பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல மரைக்கார் படத்தில் தான் பயன்படுத்திய டம்மி துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை அங்கேதான் பொருட்காட்சி போல பார்வைக்கு வைத்திருக்கிறார் மோகன்லால். அதுவும் சுற்றுலா பயணிகளை கவரும்.
அது மட்டுமல்ல இதில் ஹைலைட்டே என்னவென்றால் பல வருடங்களாக மோகன்லால் ஊட்டிக்கு வந்து தங்கும் போதெல்லாம் அவருக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்ட அவருடைய ஆஸ்தான சமையல்காரரும் தற்போது அங்கே தங்குகின்ற சுற்றுலா பயணிகளுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப உணவு சமைத்துக் கொடுக்க நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது இருந்தே அங்கே தங்குவதற்கு புக்கிங் செய்ய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.