ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
பான் இந்திய திரைப்படமாக வெளியாக இருக்கிறது தெலுங்கில் உருவாகியுள்ள கண்ணப்பா. தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகர் ஆன மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு இந்த படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்துள்ளார். புராண படமாக உருவாகியுள்ள இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிகர்கள் மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் ஜூன் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் மோகன்லால், பிரபாஸ் ஆகியோரின் பங்களிப்பு குறித்து சமீபத்தில் விஷ்ணு மஞ்சு கூறும்போது, “மோகன்லால், பிரபாஸ் இருவரிடமுமே இந்த கதை பற்றி, அவர்களது கதாபாத்திரம் பற்றி நான் கூறியபோது மறுவார்த்தை பேசாமல் ஒப்புக்கொண்டனர். அதேசமயம் ஒவ்வொரு முறையும் அவர்களது சம்பளத்தை பற்றி பேச முயற்சிக்கும் போதெல்லாம் இருவருமே என்னை திட்டினார்கள். அதில் மோகன்லால், நான் பார்க்க வளர்ந்த பையன் நீ.. இப்போது எனக்கே சம்பளம் கொடுக்கிறாயா என்று கேட்டார்.
பிரபாஸோ இன்னும் ஒரு படி மேலே போய் அடிக்கடி இதுபோல சம்பளம் பற்றி என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தால் கொன்று விடுவேன் என்று செல்லமாக மிரட்டினார். அது மட்டுமல்ல, நடிகர் அக்ஷய் குமார் கூட அவர் தற்போது தான் வாங்கும் சம்பளத் தொகையில் மிகப்பெரிய அளவில் குறைத்துக் கொண்டு குறைந்த அளவே பெற்றுக் கொண்டார். இவை அனைத்தும் இந்த படத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், என் தந்தை மீது அவர்கள் வைத்துள்ள மதிப்பையும் காட்டுகிறது” என்று நெகிழ்ந்து போய் கூறியுள்ளார்.