அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா | பிளாஷ்பேக் ; ஒரே ஆண்டில் 15 படங்கள், ஒரே நாளில் 3 படங்கள் : மோகன் சாதனை | பிளாஷ்பேக் : மனைவியை தமிழில் அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் |
கடந்த 2016ல் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ஒப்பம். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பிரியதர்ஷன் இந்த படத்தை இயக்கியிருந்தார். கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்தார். இந்த படம் வெற்றியை பெற்றது. அதே சமயம் இந்த படத்தில் கேரளாவைச் சேர்ந்த கொடுங்கல்லூர் ஆசம்பி கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றும் பிரின்சி பிரான்சிஸ் என்பவரின் சோசியல் மீடியா கணக்கிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து அவரது அனுமதி இன்றி இந்த படத்தில் பயன்படுத்தி இருந்தார்கள். அதிலும் போலீஸ் கிரைம் பைலில் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் என்பது போன்று இவரது புகைப்படம் சித்தரிக்கப்பட்டு இருந்தது.
தனது அனுமதியின்றி பயன்படுத்தியதும், இதுபோன்று ஒரே மோசமான காட்சியில் தனது புகைப்படத்தை பயன்படுத்தியதும் தனக்கு மிகுந்த மன உளைச்சலையும் சமூகத்தில் தேவையில்லாத சங்கடத்தையும் ஏற்படுத்தியதாக கூறி 2017ல் படக்குழுவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பிரின்சி பிரான்சிஸ். இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் இந்த புகைப்படத்தை பயன்படுத்துவதற்காக எடுத்துக் கொடுத்த உதவி இயக்குனர் மோகன்தாஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம்
இதற்கிடையே படத்தில் இருந்து தன்னுடைய புகைப்படத்தை நீக்கும்படி பலமுறை அவர் கோரிக்கை வைக்கும் இப்போது வரை அவரது புகைப்படம் நீக்கப்படாமலேயே இருக்கிறது. இந்த நிலையில் 8 வருடங்கள் கழித்து இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ள நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண் விரிவுரையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் 1.68 லட்சம் வழக்கு செலவு தொகையாக கொடுக்க வேண்டும் என்றும் படக்குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளது.