புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நானி. இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த நான் ஈ திரைப்படம் தமிழகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் இவர் தயாரிப்பில் வெளிவந்த படம் 'கோர்ட்'. ராம் ஜெகதீஷ் இயக்க, பிரியதர்ஷி புலிகொண்டா, ஹர்ஷ் ரோஷன், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்தனர்.
இந்த திரைப்படம் வெளியான அன்றே உலகம் முழுவதும் சுமார் 10 கோடி வரை வசூலித்தது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வரை இதுவரை வசூலித்துள்ளது.
கோர்ட் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, கோர்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற ஏப்ரல் 11-ந் தேதி வெளியாகிறது. இதனால் நானியின் ரசிகர்கள் மகிழ்ச்சி துள்ளலில் இருக்கிறார்கள்.