8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் |

நடிகர் மோகன்லாலின் படங்கள் பெரும்பாலும் எந்த சர்ச்சைக்குள்ளும் சிக்காமல் தான் இதுவரை வெளியாகி வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக பிரித்விராஜ் டைரக்ஷனில் வெளியான 'எல்2 எம்புரான்' திரைப்படத்தில் இந்து மதத்தினரை புண்படுத்தும் விதமாக சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்று சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பலர் படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி 2 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. நடிகர் மோகன்லால் இந்த காட்சிகள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் மத்தியில் உள்ள ஆளுங்கட்சியான பா.ஜ.,வை சேர்ந்த எம்.பி.,யும் மத்திய அமைச்சருமான சுரேஷ்கோபி சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோது அவரிடம் நிருபர்கள் எம்புரான் பட சர்ச்சை குறித்து கேட்டபோது அதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். மேலும் தொடர்ந்து அதுபற்றியே கேட்ட நிருபரிடம் பாசிட்டிவான கேள்விகளை மட்டுமே கேளுங்கள் என்று கூறி பதில் சொல்லாமல் நகர்ந்து விட்டார்.
பொதுவாகவே மோகன்லால் மீது மிகப்பெரிய நட்பும் மரியாதையும் கொண்டுள்ள சுரேஷ்கோபி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹேமா கமிஷன் அறிக்கை தொடர்பாக நடிகர் சங்கம் சர்ச்சையில் சிக்கியபோது கூட அதன் தலைவரான மோகன்லாலுக்கு ஆதரவாகவே நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




