இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் வாய்ப்பு தேடும் நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கப்படுவதாகவும் சிலர் மோசமாக நடத்தப்படுவதாகவும் பெண்களுக்கு சம உரிமை, சம்பளம் ஆகியவை மறுக்கப்படுவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து ஆராய்ந்த ஹேமா கமிஷன் கடந்த ஆகஸ்ட் மாதம் கேரள அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை வெளியானதை தொடர்ந்து சில நடிகைகள் மலையாள திரை உலகில் பிரபலமாக இருக்கும் சில நடிகர்கள், இயக்குனர்கள் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். சிலர் காவல் துறையில் நேரடியாக புகார் தந்து, அதனால் நடிகர்கள் சித்திக், முகேஷ், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சித்திக் முகேஷ் போன்றோர் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.
இந்த வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது முன் வைக்கப்பட்ட வாதங்கள் தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்குகள் மேற்கொண்டு நகராமல் நிற்கின்றன. இதனை தொடர்ந்து இப்படி புகார் கொடுத்தவர்களிடம் இன்னும் அழுத்தமான விளக்கங்கள் வேண்டும் என்றும் அதேபோல குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும் கட்டாயமாக விளக்கங்களை பெறவும் சிறப்பு புலனாய்வு குழு முயற்சிக்கிறது என்று உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட சிலர் மனு தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில், “சிறப்பு புலனாய்வு குழுவினரால் நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் யாரையும் சோதனைக்கு உட்படுத்த கட்டாயப்படுத்த முடியாது.. அதேபோல கட்டாயப்படுத்தி விளக்கங்களையும் கேட்கக் கூடாது.. அப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டவர்கள் ஒரு மாஜிஸ்திரேட் முன்பாக ஆஜராகி தங்களுடைய விளக்கங்களை அளிக்கலாம்.. அல்லது தங்களது விருப்பமின்மையை தெரிவிக்கலாம்.. அதேசமயம் அவர்கள் இதற்காக சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினரின் விசாரணையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஒரு வேகத்தடையாக ஆக மாறி உள்ளது.