நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

கதைக்காக மட்டுமே ஹீரோக்களை தேடிப்போகும் வெகு சில இயக்குனர்களில் ஜீத்து ஜோசப்பும் ஒருவர். மோகன்லாலை வைத்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த அவர் மீண்டும் அவரை வைத்து 'நேர்' என்கிற ஹிட் படத்தை கொடுத்தபின் அவர் அடுத்ததாக மலையாள திரையுலகின் இரண்டாம் நிலை நடிகரான ஆசிப் அலியை வைத்து 'கூமன்' என்கிற படத்தை இயக்கினார். அதையடுத்து வளர்ந்து வரும் இயக்குனரும் நடிகருமான பஷில் ஜோசப்பை வைத்து 'நுனக்குழி' என்கிற படத்தை இயக்கினார். மீண்டும் முன்னணி நடிகர்களுடன் கைகோர்ப்பார் என்று பார்த்தால் அடுத்ததாக மீண்டும் ஆசிப் அலியை வைத்து தற்போது மிராஜ் (மிரட்சி) என்கிற படத்தை இயக்கி வந்தார் ஜித்து ஜோசப்.
இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். சண்டே ஹாலிடே, பி டெக், சமீபத்தில் வெளியான கிஷ்கிந்தா காண்டம் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக ஆசிப் அலியுடன் ஜோடியாக நடித்திருக்கிறார் அபர்ணா பாலமுரளி. ஜன.,20ம் தேதி படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது 48 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் ஜீத்து ஜோசப். அடுத்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 'த்ரிஷ்யம்' படத்தில் மூன்றாம் பாகத்தின் வேலைகளை ஜீத்து ஜோசப் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.