மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் |
கன்னட திரையுலகில் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தர்ஷன். கடந்த ஜூன் மாதம் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் அடிக்கடி ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி டார்ச்சர் செய்தார் என்கிற கோபத்தில் அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட மூன்று மாத சிறைவாசத்தில் அவர் பலமுறை ஜாமின் விண்ணப்பித்தும் அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் தனது உடல் நிலையை காரணம் காட்டி முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவரின் பரிந்துரையை மேற்கோள் காட்டி ஆறு வார இடைக்கால ஜாமின் பெற்றார் தர்ஷன்.
அதற்குள் ஒரு வழியாக தர்ஷன் மட்டுமல்லாது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது மைசூருக்கு அருகில் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார் தர்ஷன். இவருக்கு ஜாமின் வழங்கப்படும் போது நீதிமன்றத்தில் தனக்கு மைசூருக்கு அருகில் உள்ள பண்ணை வீட்டில் சென்று தங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து இருந்தார் தர்ஷன். அதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது பண்ணை வீட்டில் தங்கியுள்ள தர்ஷனை அவரது அம்மா உள்ளிட்ட நெருங்கிய குடும்ப உறவுகளும் நெருங்கிய சில நண்பர்கள் மட்டுமே சென்று சந்தித்து உள்ளனர். அவரது பண்ணை வீட்டில் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாத வண்ணம் முன்புறம் உள்ள கேட் முற்றிலும் மறைக்கப்பட்டு உள்ளது.