2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு அரசு தரப்பில் அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை தினமும் 5 காட்சிகளை காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதி தந்துள்ளார்கள், அதுபோலவே தமிழகத்திலும் அனுமதி தர வேண்டும்' என தயாரிப்பு நிறுவனம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தது.
அதன்படி, இன்று (அக்.,17) நடைபெற்ற விசாரணையின்போது, 5 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கிறீர்கள்; அதை செயல்படுத்த அனுமதிக்க வேண்டாமா என நீதிபதி அனிதா சுமந்த் கேள்வி எழுப்பினார். இதற்கு தமிழக அரசு தரப்பில், ''20 நிமிடங்களுக்கு இடைவெளி விட வேண்டுமென எந்த கட்டாயமும் இல்லை. 9 மணிக்கு காட்சிகளை துவங்க வேண்டும் என்பதுதான் அரசின் விதி; அதனை மீற முடியாது.'' என வாதிடப்பட்டது.
பிறகு, '5 காட்சிகளுக்கு அனுமதி அளித்ததால் தானே அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்கிறார்கள்' என நீதிபதி குறுக்கிட்டார். வாதத்தை தொடர்ந்த அரசு தரப்பு, ''விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு தினங்களில்தான் விலக்கு அளிக்கப்படுகிறது; சாதாரண நாட்களில் விலக்குதர முடியாது. லியோ படம் 2.45 மணிநேரம் என தெரிந்திருந்தால் 5 காட்சிகளுக்கு அனுமதி தந்திருக்க மாட்டோம். 4 மற்றும் 7 மணி காட்சிக்கு அனுமதி தருவதில் சிக்கல்கள் உள்ளன; எந்த படத்திற்கும் அனுமதியளிக்கவில்லை. கடந்தமுறை ஒரு படத்தின் 4 மணி காட்சிக்கு சென்ற ரசிகர் உயிரிழந்தார்; சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது. லியோ படத்தின் டிரைலரை வெளியிட்டபோது தியேட்டர் சேதப்படுத்தப்பட்டது.'' என வாதிடப்பட்டது.
இதனையடுத்து, 'லியோ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது. காலை 9 மணி காட்சிக்கு பதில் 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். காலை 9 மணிக்கு பதில் 7 மணிக்கு ரிலீஸ் செய்வது பற்றி அரசுதான் முடிவெடுக்க வேண்டும். தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலித்து நாளை மதியத்திற்குள் உத்தரவு பிறக்க வேண்டும்' என தமிழக அரசுக்கு நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.