50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு |
சமீபத்தில் நடந்த பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சிக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. எனக்கு முறையாக அழைப்பு அனுப்பப்படவில்லை என்று அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இதனை ஆளும் கட்சி எம்.எல்.ஏ ரவிகுமார் கவுடா விமர்சனம் செய்திருந்தார். 'பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளுமாறு அவரை (ராஷ்மிகா) கடந்த ஆண்டு அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். என் வீடு ஐதராபாத்தில் இருக்கிறது. கர்நாடகா எங்கே என்று எனக்குத் தெரியாது; எனக்கு நேரமில்லை. என்னால் வர முடியாது' என்று அவர் கூறிவிட்டார். எனக்குத் தெரிந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், 10 முதல் 12 முறை அவரது வீட்டுக்குச் சென்று அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் வர மறுத்துவிட்டார்.
தன்னுடைய சினிமா வாழ்க்கையை இங்கு தொடங்கி வளர்ந்தபோதும், கன்னடத்தை அவர் புறக்கணித்துவிட்டார். அதற்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா?' என்று கூறினார். அதேபோல் கன்னட ஆர்வலர் டி.ஏ.நாராயண கவுடாவும் ராஷ்மிகா மந்தனாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
இந்நிலையில் கொடவா சமூகத்தின் தேசிய கவுன்சில் தலைவர் நாச்சப்பா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சட்டசபை எம்எல்ஏ ஒருவரால் ராஷ்மிகா மந்தனா அச்சுறுத்தப்படுகிறார். கொடவா பழங்குடியினத்தை சேர்ந்த ராஷ்மிகா தனது சொந்த உழைப்பில் இந்த உயரத்தை அடைந்துள்ளார். அவரை அச்சுறுத்துவது, எங்களது சமூகத்தையே அச்சுறுத்துவது போன்றதாகும். எனவே மாநில அரசு ராஷ்மிகாவிற்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.