வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் | புதிய கதையில் வெளிவரும் 'ஜூராசிக் பார்க்' | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை வாடா, போடா என்று அழைத்த ஒரே இயக்குனர் | 'குபேரா' முதல் நாள் வசூல்: முதற்கட்டத் தகவல் | 'ஆர்ஜேபி' என பெயரை சுருக்கிய ஆர்ஜே பாலாஜி |
மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த கும்பலாங்கி நைட்ஸ் படத்தின் மூலம் இளம் நடிகராக அறிமுகமானவர் மேத்யூ தாமஸ். அதன் பிறகு தொடர்ந்து முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்த மேத்யூ தாமஸ் இரண்டு வருடங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் விஜய்யின் மகனாக நடித்து தமிழிலும் பிரபலமானார்.
சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற படத்திலும் நகைச்சுவை நடிப்பில் பிரமாதப்படுத்தினார். இந்த நிலையில் மலையாளத்தில் இவரது நடிப்பில் லவ்லி என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம் இந்த படத்தில் நாயகி கதாபாத்திரத்தில் ஒரு ஈ நடித்துள்ளது.
இந்த டீசரில் மேத்யூ தாமஸ் அந்த ஈயுடன் பேசுவதை பார்க்கும்போது கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் சமந்தா, நானி நடித்த நான் ஈ படத்தை பார்ப்பது போலவே இருக்கிறது. அதில் நாயகன் ஈயாக வந்தார். இதில் நாயகி ஈயாக வருகிறார். அந்த படத்தின் உல்டாவாக தான் இந்த படம் உருவாகி இருப்பது போல தெரிகிறது.
திலீஷ் கருணாகரன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். 3டியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரபல இயக்குனரான ஆஷிக் அபு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். குழந்தைகளை கவரும் படமாக இது உருவாகி இருப்பதால் வரும் ஏப்ரல் நான்காம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.