அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் |

நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் எம்புரான். ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான லூசிபர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகி உள்ளது.. அரசியல் பின்னணியில் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இதில் மோகன்லால், மஞ்சு வாரியர், பிரித்விராஜ், டொவினோ தாமஸ் உள்ளிட்ட முதல் பாகத்தில் இடம்பெற்ற பல நட்சத்திரங்கள் இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றனர்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இந்த இரண்டாம் பாகமும் உருவாகியுள்ளது. வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்த படம் 179.52 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ளது. அதாவது 3 மணி நேரத்திற்கு வெறும் எட்டு வினாடிகள் மட்டுமே குறைவு. இதேபோல லூசிபர் படம் வெளியான போதும் இரண்டு மணி நேரம் 54 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.