இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' |

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் ககனாச்சாரி என்கிற திரைப்படம் வெளியானது. அருண் சந்து என்பவர் இயக்கிய இந்த படத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் மற்றும் நகைச்சுவை நடிகர் அஜூ வர்கீஸ் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஒரு சயின்ஸ் பிக்ஷன் கதையம்சத்துடன் உருவாகி இருந்தது. சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் தரமான விஎப்எக்ஸ் பணிகளுடன் வெளியான இந்த படத்தை பார்த்த எல்லோருமே நல்ல படம் என்று பாராட்டினார்கள்.
கேரளாவில் ஓரளவிற்கு இந்த படம் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை தற்போது தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் சேர்த்து வெளியிட இருக்கிறார்கள். வரும் ஜூலை 5ம் தேதி இந்த படம் நான்கு மொழிகளிலும் வெளியாகிறது. பிரபல நிறுவனமான ஜெமினி பிலிம்ஸ் மற்ற மொழிகளில் வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளது.