பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் |
மலையாள நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி நேற்று நடிகை வரலட்சுமியின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
கேரள மக்கள் வழங்கிய ஆசிர்வாதத்தால் நான் எம்.பி.,யாக தேர்வாகி உள்ளேன். நான் கேரளாவிற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் அமைச்சராக பணியாற்றுவேன். மக்களுக்கு முக்கியமாக எதை செய்ய வேண்டுமோ அதை செய்வேன். கேரளாவில் பிறந்தாலும் சென்னை என்னை வளர்த்த இடம். நடிக்க வாய்ப்பு தந்து, தூங்க இடம் தந்தது. தமிழ்நாட்டை நேசிக்கிறேன்.
எனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் இருக்கிறது. சுற்றுலாத்துறை மூலமாக எந்த திட்டமாக இருந்தாலும் செய்து கொடுக்கலாம். பெட்ரோலியம் துறையில் துறை சார்ந்த அனுபவங்கள் எதுவும் தற்போது என்னிடம் இல்லாததால், அதை கற்றுக்கொண்டு வருகிறேன். பெட்ரோலிய பொருட்கள் விலை குறைப்பு பற்றி யோசிக்காமல் அதற்குரிய வேறு வழி என்ன என்று யோசிக்க வேண்டும்.
சபரிமலையில் கடந்த ஆண்டு பக்தர்களுக்கு முறையான தரிசன ஏற்பாடுகள் செய்யவில்லை. சபரிமலையை யாரும் தொட முடியாது. தொட்டவர்கள் எங்கோ காணாமல் போய்விட்டார்கள். என்றார்.
விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் சுரேஷ் கோபி. அத்துடன் சத்தியம் தியேட்டரில் அவரது மகன் கோகுல் சுரேஷ் நடித்த 'ககனாச்சாரி' படத்தை பார்த்து ரசித்தார்.