பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

தமிழ், தெலுங்கு திரையுலகத்திற்கு ஈடாக தற்போது கன்னடத் திரையுலகமும் வளர்ந்துள்ளது. 'கேஜிஎப் 2, காந்தாரா' ஆகிய திரைப்படங்கள் கன்னடத் திரையுலகத்தை இந்திய அளவில் பேச வைத்த படங்களாக அமைந்தன.
கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் சில தனியார் ஸ்டுடியோக்கள் மட்டுமே உள்ளன. அருமையான தட்பவெப்ப நிலை கொண்ட அந்த ஊரில் அரசு சார்பில் பிலிம் சிட்டி எதுவும் இதுவரை அமைக்கப்படவில்லை.
தற்போது மைசூரில் பிலிம் சிட்டி அமைக்கப்படும் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து பேசுகையில் அதை அவர் அறிவித்தார்.
மறைந்த கன்னட நடிகரான ராஜ்குமார் கன்னட சினிமாவுக்காக பிலிம் சிட்டி அமைக்க வேண்டும் என்று எப்போதோ கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், எந்த ஒரு மாநில அரசும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இந்நிலையில் மைசூரில் அரசு சார்பில் 100 ஏக்கர்நிலம் வழங்கப்பட்டுள்ளது. பிபிபி மாடலில் அங்கு விரைவில் அரசு பிலிம் சிட்டி அமைக்கப்படுமென முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், மாநில அரசு சார்பில் ஓடிடி நிறுவனம் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.