'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக இருப்பவர் பவன் கல்யாண். இவர் ஒரு படத்தில் நடிக்க 70 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலின் போது ஆந்திராவில் சட்டசபை தேர்தலும் சேர்ந்தே நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கட்சிகளுடன் இணைந்து பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதன் காரணமாக தற்போது ஆந்திராவின் துணை முதல்வராகியிருக்கிறார் பவன் கல்யாண்.
சமீபத்தில் அவர் ஆந்திர மாநில தலைமைச் செயலகத்திற்கு சென்றபோது அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பவன் கல்யாண், 3 நாட்கள் மட்டுமே தலைமைச் செயலகத்திற்கு நான் வந்துள்ளேன். அதனால் எனக்கு சம்பளம் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். அதோடு தற்போது ஆந்திரா மாநிலத்தில் நிதிநிலைமை ரொம்ப மோசமாக உள்ளது. அதனால் எனக்கு சம்பளம் வாங்கவே மனமில்லை. இனிமேல் சம்பளம் வாங்காமலேயே துணை முதலமைச்சராக பணியாற்ற போகிறேன் என்றும் கூறியிருக்கிறார் பவன் கல்யாண்.
இவரது இந்த அறிவிப்பை பலரும் வரவேற்று பாராட்டி உள்ளனர்.