ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கிய குடும்பங்களில் ஒன்று சிரஞ்சீவி குடும்பம். அவருடைய தம்பிகள், தம்பி மகன்கள், என பலரும் நடிகர்களாக உள்ளனர். சிரஞ்சீவியின் கடைசி தம்பியான பவன் கல்யாண், ஜனசேனா கட்சியை நடத்தி வருகிறார்.
நாளை நடைபெற உள்ள ஆந்திர சட்டசபைத் தேர்தலில் ஜனசேனா, தெலுங்கு தேசம், பா.ஜ., ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பித்தாபுரம் தொகுதியில் பவன் கல்யாண் போட்டியிடுகிறார். நேற்றுடன் அங்கு பிரசாரம் முடிவடைந்தது.
நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், அவரது அம்மா சுரேகா நேற்று பித்தாபுரம் சென்றிருந்தனர். அங்குள்ள குக்குடேஸ்வர சுவாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டனர். பித்தாரபுரத்தில் உள்ள பவன் கல்யாண் வீட்டிற்கும் சென்று பவன் கல்யாணை சந்தித்து தேர்தலில் வெற்றிப் பெற வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தயாரிப்பாளரும், நடிகர் அல்லு அர்ஜுனின் அப்பாவுமான அல்லு அரவிந்த் உடனிருந்தார்.
அப்பா அல்லு அரவிந்த், பவன் கல்யாணை சந்தித்து வாழ்த்து சொல்லி, மகன் அல்லு அர்ஜுனோ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நந்தியால் தொகுதியில் போட்டியிடும் அவருடைய நண்பர் ரவிசந்திர கிஷோர் ரெட்டிக்கு ஆதரவாக நேற்று பிரசாரம் செய்தார்.