2025 பொங்கல் போட்டியில் என்னென்ன படங்கள் ? | பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா | சங்கராந்தி தினத்தில் ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' | இட்லி கடை படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக்கான வீடியோ | ராம்கோபால் வர்மா - பஹத் பாசில் சந்திப்பு : பின்னணி என்ன ? | கேரள மலைப்பகுதிகளில் கேஷுவலாக ஜாக்கிங் போகும் விஜய் தேவரகொண்டா | 4 மணிநேர காத்திருப்பு : ஸ்ருதிஹாசனை அவதிக்குள்ளாக்கிய விமான நிறுவனம் | புதிய பிரபஞ்சம் உருவானாலும் அங்கேயும் ரஜினி ஒருவர்தான் : ரித்திகா சிங் பிரமிப்பு | மாமனார் அமிதாப்புக்கு தாமதமாக வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ராய் | எனக்கு தொழில் ரொமான்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ராம்சரண் தனது தந்தை சிரஞ்சீவியை போலவே இன்று தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய முன்னணி நடிகராக வளர்ந்து விட்டார். குறிப்பாக அடுத்தடுத்து ராஜமலியின் டைரக்ஷனில் இரண்டு படங்களில் நடித்தது அவரை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு சென்று விட்டது. அதேசமயம் பொது நிகழ்ச்சிகளில் மிகவும் எளிமையாக கலந்து கொள்ளும் ராம்சரண் தனது தந்தையுடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவருடன் அவ்வளவு அன்யோனியமும் அன்பும் காட்டுவதையும் பல நிகழ்ச்சிகளில் நாம் பார்த்திருக்க முடியும். அதே சமயம் இந்த அளவிற்கு அனைவரிடமும் ராம்சரண் மரியாதையாக நடப்பதற்கு சிறுவயதிலேயே அவரது தந்தை அவருக்கு கொடுத்த ஒரு ட்ரீட்மெண்ட் தான் காரணம் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ராம்சரண்.
இது குறித்து அவர் கூறும்போது, “எனக்கு கிட்டத்தட்ட எட்டு வயது ஆகும் சமயத்தில் எங்களது கார் டிரைவர் மற்றும் வாட்ச்மேன் ஆகியோர் பேசும் சில வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அடிக்கடி அவர்கள் அதை பேசுவதை பார்த்துவிட்டு வீட்டிற்குள் சென்று எனது சித்தப்பா நாகபாபுவிடம் அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். அப்போதுதான் சரியாக எனது தந்தையும் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினார். உடனே எனது சித்தப்பா என்னை அழைத்துக் கொண்டு என் தந்தையின் அறிகு சென்றார். அவரிடம் நான் சொன்ன வார்த்தைகளை கூறி இதற்கு விளக்கம் கேட்கிறான் என்று சொன்னார். உடனே சித்தப்பாவை வெளியே போக சொன்னார் அப்பா. எனக்கு அதற்கான காரணம் தெரியவில்லை.
அதன் பிறகு கதவை பூட்டிவிட்டு அவருக்கு அவருடைய போலீஸ் தந்தை ஓய்வு பெற்றபின் பரிசாக கொடுத்திருந்த போலீஸ் பெல்டால் அடி பின்னி எடுத்து விட்டார். அதன்பிறகு இது போன்ற வார்த்தைகளை இனி ஒருபோதும் பேசக்கூடாது என்று அறிவுரை கூறினார். அது மட்டுமல்ல வீட்டில் தாயுடனோ அல்லது வீட்டில் உள்ள மற்ற பெண்களுடனோ சச்சரவில் ஈடுபடும் ஆண்களையும் அவருக்கு அறவே பிடிக்காது. அந்த அளவிற்கு நன்னடத்தை விதிகளை கண்டிப்பாக கடைபிடித்து வந்தார் எனது தந்தை” என்று கூறியுள்ளார் ராம் சரண்.