இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” |
லட்சுமி காந்தன் கொலை வழக்கில் 30 மாத சிறைவாசத்திற்குப் பிறகு, என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து, இயக்கிய படம் 'மணமகள்'. பிரபல மலையாள நாடக ஆசிரியர் முன்ஷி பரமு பிள்ளையின் பிரபலமான மலையாள நாடகமான 'சுப்ரபா'வை அடிப்படையாகக் கொண்டு, இந்தப் படம் தயாரானது. மு. கருணாநிதி வசனம் எழுதினார். என்.எஸ்.கே ஒரு சமூக சீர்திருத்தவாதியின் பாத்திரத்தில் நடித்தார். அவருடன் பத்மினி, லலிதா, எஸ்.வி.சஹஸ்ரநாமம், டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் மற்றும் டி.எஸ்.துரைராஜ் ஆகியோரும் நடித்தனர்.
பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இல்லாமல் கட்டாயம் திருமணம் செய்து வைப்பது தொடர்பான கதை. அந்த காலத்தில் படத்தில் பணியாற்றும் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் வெளியில் தெரிய மாட்டார்கள். ஆனால் இந்த படத்தின் டைட்டிலின் போது தொழில்நுட்ப கலைஞர்களை திரையில் காட்டினார். அந்த வகையில் வசனம் எழுதிய கருணாநிதியும் திரையில் தோன்றினார்.
எஸ்எஸ் ராஜேந்திரன் இந்த படத்தில் தான் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானார். இதில் அவர் பிச்சைக்காரனாக நடித்தார். புரட்சிகரமான வசனங்களை பேசினார். அவர் காட்சிகளும் அவர் பேசிய வசனங்களும் அமைதிக்கு பங்கும் விளைவிக்கலாம் என்று கூறி தணிக்கை குழு நீக்கிவிட்டது. என்றாலும் டைட்டில் கார்டில் எஸ்எஸ் ராஜேந்திரன் பெயர் இடம் பெற்றது. பின்னர் அவர் 'பராசக்தி' படத்தில் நடித்து புகழ் பெற்றார்.