கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
சில நாட்களுக்கு முன்பு மலையாள திரையுலகம் குறித்து வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில் தாங்கள் இந்த துறையில் ஆண்களிடம் சந்தித்த கசப்பான பாலியல் அனுபவங்கள் குறித்து கூறி வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் திரையுலகில் தனது அனுபவம் எப்படி இருக்கிறது என்று கூறியுள்ளார். தமிழில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, இறுகப்பற்று உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
இது குறித்து சமீபத்தில் அவர் கூறும்போது, “சினிமாவில் இது போன்ற கசப்பான அனுபவங்கள் எதையும் நான் சந்தித்ததில்லை. அதே சமயம் மற்றவர்கள் சந்திக்கவில்லை என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் சினிமாவை தாண்டி வெளியே குறிப்பாக நான் ஏதாவது நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு செல்லும்போது அதன் டிரைவர் என்னை எந்தவிதமாக பார்க்கிறார் என்பதிலேயே எனது எண்ண ஓட்டம் தொடர்ந்து இருக்கும். என்னால் பல சமயங்களில் இயல்பாக அமர்ந்து பயணிக்க முடிந்ததில்லை” என்று கூறியுள்ளார். மேலும், ‛‛சினிமாவில் மேக்கப் பணி செய்யும் பெண்கள் சேலைகளை அணிவிக்கும் பெண்கள் ஆகியோருக்கு கழிவறை வசதிகள் கூட சுத்தமாக இல்லை, இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும்'' என்றும் கூறியுள்ளார்.