ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பிரபு நடிக்கும் படங்கள் எப்போதுமே ஒரு கட்டுக்கோப்புடன் இருக்கும். வன்முறை, ஆபாசம் அதிகமான படங்களில் அவர் நடிப்பதில்லை. அப்படி இருந்தும் அவரது சில படங்கள் தணிக்கையில் சிக்கியது. அவற்றில் ஒன்று 'அடுத்தாத்து ஆல்பர்ட்'.
இந்த படத்தின் கதை சுவாரஸ்மானது. பிரபு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர், ஊர்வசி பிரமாண சமூகத்தை சேர்ந்தவர். இருவருமே பக்கத்து வீட்டுக்காரர்கள். அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும் அடிமனதில் இருவரும் காதலிப்பார்கள். பிரபுவின் தம்பியும், ஊர்வசியின் தங்கையும் காதலிப்பார்கள். இவர்களின் காதலை சேர்த்து வைக்க இருவரையும் தற்கொலை செய்தது போல நடிக்கச் சொல்வார்கள். இந்த திட்டம் நிறைவேறுவதற்கு முன்பே இருவரும் நிஜமாகவே தற்கொலை செய்து கொள்வார்கள். அதன்பின் பிரபுவும், ஊர்வசியும் இணைந்தார்களா என்பதே படத்தின் கதை.
படத்தில் மதம் குறித்து கடினமான விமர்சன வசனங்கள் இருந்தது. இதனால் அந்த வசனங்களை நீக்கினால்தான் சான்றிதழ் தர முடியும் என்று தணிக்கை வாரியம் கூறியது. அதன்பிறகு நடந்த பேச்சு வார்த்தையில் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் தணிக்கை குழுவிற்கு விளக்கம் அளித்தார். அதன்பிறகு கதையோட்டம் பாதிக்காத வசனங்கள் நீக்கப்பட்டு படம் வெளியானது. இந்த படத்தின் தகவல் வெளியில் பரவ, இயக்குனர் ரங்கராஜனுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறுவார்கள்.
இதனால் படத்தின் ரிலீஸ் போஸ்டரில் 'ஆர்ப்பாட்டகாரர்களின் அட்டகாசத்தை முறியடித்து, குண்டு வீசுவோரின் கோமாளித்தனத்தை தகர்த்தெறிந்து, சென்சார் போர்டின் நீதியான தீர்ப்பை சுமந்து வீரபவனி வருகிறார் ஆல்பர்ட்' என்ற வாசகம் இடம் பெற்றது.