மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ஓடிடியில் ஜொலிக்குமா யோகி பாபுவின் 'லெக் பீஸ்' | இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் கடவுளாக நடித்த சிவாஜி, ரஜினி, கமல் | அதிரடி காட்டும் விமலின் ஓம் காளி ஜெய் காளி | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனம் எழுதிய புராண படம் | வீர தீர சூரன் 5 நாள் வசூல் முழு விவரம் | சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்' | பிளாஷ்பேக்: “படித்த பெண்” திரைப்படப் பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் |
தெலுங்கு நடிகர் ராம்சரண், உபாசனா தம்பதிக்கு திருமணமாகி கிட்டத்தட்ட பத்து வருடம் கழித்து கிலின் காரா என்கிற பெண் குழந்தை பிறந்தது. இதனால் தங்கள் குழந்தை மீது மிகுந்த பாசம் செலுத்தி வரும் தம்பதியினர் குழந்தையின் புகைப்படங்கள் மற்றும் அதன் விளையாட்டுகள் குறித்த வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ராம்சரண் பேசும்போது விலங்குகள் மீதான தனது பாசம் குறித்து பேசினார்
அவர் பேசும்போது, “எனக்கு விலங்குகள் மீது குறிப்பாக குதிரைகள் மீது அதிக பிரியம் உள்ளது. என்னுடைய பண்ணையில் 15 குதிரைகள் இருக்கின்றன. மகதீரா படத்தில் நடித்தபோது அதில் என் உயிரை காப்பாற்றும் காட்சியில் நடித்த பாஷா என்ற குதிரை சமீபத்தில் ஒரு குட்டியை ஈன்றது. அந்த குட்டியை எனது மகளுக்கு நான் பரிசாக அளித்தேன். அதில் அவர் அழகாக ஒரு சவாரியும் செய்துவிட்டார்” என பெருமிதத்துடன் கூறியுள்ளார் ராம்சரண்.