ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
தெலுங்கு திரை உலகில் இளம் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. எந்த அளவிற்கு பெண் ரசிகைகள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு இளைஞர்களும் மாணவர்களும் கூட விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களாக இருக்கின்றனர். தற்போது மாணவர்களுக்கு பொதுத்தேர்வு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இதனால் பெரிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் கூட ஏப்ரல் அல்லது மே மாதத்திற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்கள் சிலர் ஒரு குழுவாக சேர்ந்து விஜய் தேவரகொண்டாவுக்கு கோரிக்கை வைத்துள்ளதும் அதற்கு விஜய் தேவரகொண்டா பதில் அளித்ததும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
அவருடைய ரசிகர்களான சில மாணவர்கள் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டனர். அதில் விஜய் தேவரகொண்டா இந்த வீடியோவிற்கு கீழே தனது கமெண்ட்டை பதிவிட்டால் நாங்கள் தேர்வுக்கு தயாராக துவங்குவோம் என்று கூறியிருந்தனர். ஆச்சரியமாக இந்த வீடியோ விஜய் தேவரகொண்டாவின் கவனத்திற்கு வந்ததும், அந்த பதிவின் கீழே, “90% மதிப்பெண்கள் வாங்குங்கள்.. உங்களை நேரிலேயே சந்திக்கிறேன்” என வாக்குறுதி கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். சம்பந்தப்பட்ட மாணவர்கள் மட்டுமல்ல, பலரும் அவரது இந்த ஊக்கமான வார்த்தைகளுக்கு தங்களது பாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.