10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் 'மை லைப் பார்ட்னர் என்கிற படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக துணிச்சலாக நடித்து சிறந்த நடிகருக்கான கேரளா அரசு விருது பெற்றவர் இளம் நடிகர் சுதேவ் நாயர். ஆனால் அடுத்ததாக பிரித்விராஜூடன் இணைந்து நடித்த 'அனார்கலி' படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளைத் தொடர்ந்து சமீபகாலமாக தெலுங்கிலும் வில்லனாக நடித்து வருகிறார் சுதேவ் நாயர்.
இந்த நிலையில் தனது நீண்ட நாள் தோழியும் மும்பையைச் சேர்ந்த மாடல் மற்றும் நடிகையுமான அமர்தீப் கவுர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் சுதேவ் நாயர். இவர்களது திருமணம் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் குருவாயூர் கோவிலில் நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலரும் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தனது திருமண புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார் சுதேவ் நாயர்.